கல்வி மந்திரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஆசிரியர்- ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

பொதுவெளியில் மந்திரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் கல்வி மந்திரி மதன் திலாவர் தனது அரசு இல்லத்தில் நேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அரசு பள்ளி ஆசிரியரான சந்திரகாந்த் வைஷ்ணவ் என்பவர், மாநில பாடத்திட்ட குழுவில் தன்னையும் சேர்க்கக்கேட்டு மனு ஒன்றுடன் மந்திரியை சந்திக்க வந்தார். மேலும் அவர் ஒரு இனிப்பு பாக்ஸ் மற்றும் ஒரு 'கவரு'டன் வந்திருந்தார். அந்த கவரை ஊழியர் ஒருவர் பரிசோதித்தபோது அதில் ரூ.5 ஆயிரம் இருந்தது. உடனே இது குறித்து அவர் மந்திரியிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசுக்கு மந்திரி திலாவர் தகவல் தெரிவித்தார்.
உடனே விரைந்து வந்த போலீசார், சந்திரகாந்த் வைஷ்ணவை பிடித்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவெளியில் மந்திரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story