தேயிலை தோட்டங்களில் புகுந்து படையப்பா காட்டு யானை அட்டகாசம்

படையப்பா காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேயிலை தோட்டங்களில் புகுந்து படையப்பா காட்டு யானை அட்டகாசம்
Published on

மூணாறு,

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள குண்டலை, செண்டுவாரை ஆகிய தேயிலை தோட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக படையப்பா காட்டு யானை சுற்றித்திரிகிறது. அப்போது தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தியும், குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசமும் செய்து வந்தது.

இந்தநிலையில் நேற்று குண்டலை தேயிலை தோட்ட பகுதியில் படையப்பா யானை உலா வந்தது. அப்போது அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தொழிலாளர்கள் பயிர் செய்திருந்த பீன்ஸ், முட்டை கோஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை தின்று சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com