

திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம், அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதில் அதிகபட்ச கட்டணமாக படி பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் நிர்ணையம் செய்யப்பட்டது.
இதே போல் உதயாஸ்தமன பூஜைக்கு 40 ஆயிரம் ரூபாயும், சகஸ்ரகலச பூஜைக்கு 40 ஆயிரம் ரூபாயும், லட்சார்ச்சனைக்கு 10 ஆயிரம் ரூபாயும், புஷ்பாபிஷேகத்திற்கு ரூ.10 ஆயிரம் ரூபாயும், அஷ்டாபிஷேகத்திற்கு ரூ.5 ஆயிரம் ரூபாயும் நிர்ணையிக்கப்பட்டது. இந்த நிலையில் படி பூஜைக்கு 2036 ஆம் ஆண்டு வரையும், உதயாஸ்தமன பூஜைக்கு 2026 ஆம் ஆண்டு வரையும் முன்பதிவு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.