66 பேருக்கு பத்ம விருதுகள்; ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்குகிறார்

2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார்.
66 பேருக்கு பத்ம விருதுகள்; ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்குகிறார்
Published on

புதுடெல்லி,

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) நடை பெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார். அதாவது 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார்.

விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகி ருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டிற்கு 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண், 113 பத்மஸ்ரீ உள்ளிட்ட 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி ஒப்பு தல் அளித்துள்ளார். மீதமுள்ள விருதுகள், பின்னர் நடைபெறும் மற்றொரு விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள் ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com