5 பேருக்கு பத்ம விபூஷண் விருது :நடிகர் மம்முட்டி உட்பட 13 பேருக்கு பத்ம பூஷண்; தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருது

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி,நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியர்வர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது .2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று அறிவித்தது. இந்த விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது, 13 பேருக்கு பத்ம பூஷன் விருது, 5 பேருக்கு பத்ம விபூஷன் விருது என 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 பேருக்கு பத்ம விபூஷண் விருது
மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, கேரளாவை சேர்ந்த கே.டி.தாமஸ், பி.நாராயணன், வி.எஸ்.அச்சுதானந்தன், கலை பிரிவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த என்.ராஜத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
13 பேருக்கு பத்ம பூஷண் விருது
* மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷண் விருது
* ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரனுக்கு பத்ம பூஷண் விருது
* மராட்டியத்தை சேர்ந்த அல்கா யாக்னிக்கு பத்ம பூஷண் விருது
* தமிழ்நாட்டை சேர்ந்த மயிலானந்தத்திற்கு சமூக சேவைக்கான பத்ம பூஷண் விருது
* தமிழ்நாட்டை சேர்ந்த கள்ளிப்பட்டி ராமசாமிக்கு பத்ம பூஷண் விருது
* உத்தரகாண்டை சேர்ந்த ஸ்ரீ பகவத் சிங் கோஷியாரிக்கு பத்ம பூஷண் விருது
*அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் நோரி தத்தாத்ரேயுடுவிற்கு பத்ம பூஷண் விருது
*மராட்டியத்தை சேர்ந்த ஸ்ரீ பியூஷ் பாண்டேவிற்கு பத்ம பூஷண் விருது
*கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீ சதாவதானி ஆர் கணேஷ்க்கு பத்ம பூஷண் விருது
*மராட்டியத்தை சேர்ந்த ஸ்ரீ உதய் கொடக்கிற்கு பத்ம பூஷண் விருது
*டெல்லியை சேர்ந்தா ஸ்ரீ வி கே மல்ஹோத்ரா (மறைவுக்குப் பின்) விற்கு பத்ம பூஷண் விருது
* கேரளாவை சேர்ந்த ஸ்ரீ வெள்ளப்பள்ளி நடேசன் அவர்களுக்கு பத்ம பூஷண் விருது
*அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீ விஜய் அமிர்தராஜ்க்கு பத்ம பூஷண் விருது
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது
* விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ராணுவ அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு பல்வேறு துறைகளின் கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் விருது பெறுபவர்களின் பட்டியல்
* மருத்துவத்துறையில் கள்ளிப்பட்டி ராமசாமிக்கு பத்ம பூஷண் விருது
* சமூக சேவைக்காக எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்ம பூஷண் விருது
* கலைத்துறை பிரிவில் காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது
* மருத்துவத்துறை பிரிவில் ஹெச்.வி.ஹண்டேவுக்கு பத்மஸ்ரீ விருது
* அறிவியல் மற்றும் இன் ஜினியரிங் பிரிவில் கே.ராமசாமி பத்ம ஸ்ரீ விருது
* சிவில் சர்வீஸ் பிரிவில் கே.விஜயகுமாருக்கு பத்மஸ்ரீ விருது
* கலைப்பிரிவில் ஸ்ரீ ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கு பத்மஸ்ரீவிருது
* மருத்துவத்துறை பிரிவில் புண்ணியமூர்த்தி நடேசனுக்கு பத்மஸ்ரீ விருது
* கலைத்துறை பிரிவில் மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது
* கலைத்துறை பிரிவில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் பத்மஸ்ரீ விருது
* அறிவியல் மற்றும் இன் ஜினியரிங் பிரிவில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது
* இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் சிவசங்கரிக்கு பத்மஸ்ரீ விருது
* கலைப்பிரிவில் திருவாரூர் பக்தவச்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது.






