கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு; கேரளாவில் அதிர்ச்சி


கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு; கேரளாவில் அதிர்ச்சி
x
தினத்தந்தி 1 Sept 2025 3:40 PM IST (Updated: 1 Sept 2025 4:47 PM IST)
t-max-icont-min-icon

ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானையான ஸ்கந்தன், பாகனை கீழே தள்ளி தாக்கியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானையான ஸ்கந்தன், திடீரென மிரண்டு பாகனை தாக்கியுள்ளது. தன் மீது அமர்ந்து இருந்த பாகனை கீழே தள்ளிய கோவில் யானை, ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பாகன் முரளிதரன் நாயர் (வயது 58) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

முதல் பாகன் முரளிதரன் நாயரை ஸ்கந்தன் யானை தாக்கியபோது, அவரை காப்பாற்ற துணைப் பாகன் முயற்சி செய்தார். இதில் துணைப் பாகன் சுனில் குமாரும் படுகாயம் அடைந்தார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story