பஹல்காம் தாக்குதல் சம்பவம் - 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக ஆத்திரம் மூட்டும் வகையில் செயல்பட்ட16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. டான் நியூஸ், சமா டிவி, ஆரி நியூஸ், ஜியோ நியூஸ் உள்ளிட்ட 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Related Tags :
Next Story






