பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் - அமித்ஷா சூளுரை

பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் - அமித்ஷா சூளுரை
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக பொதுவெளியில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து அவர் பேசியதாவது;-

"பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது. பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும். பயங்கரவாதிகள் அனைவரும் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள்.

இந்தியாவில் முழுமையாக பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் எங்கள் நோக்கம். பயங்கரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரை எங்கள் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com