

புவனேஸ்வரம்,
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தனது 3 மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நவீன் பட்நாயக் தனது 3 மாத சம்பளத்தை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். கொரோனாவை தடுக்க, அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.