ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு
Published on

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே, இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் தபான் மோண்டல் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com