

இந்த தாக்குதலில் ராணுவத்தில் சுமை தூக்குபவராக பணிபுரிந்த ஒருவர் கொல்லப்பட்டார். முன்னறிவிப்பு இன்றி எல்லையில் அத்துமீறி இந்த தாக்குதல் நடந்துள்ளது என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளையில் தாக்குதலில் காயமடைந்த சிறுமி உரி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
இந்த வருடத்தில் பாகிஸ்தான் படைகளின் அத்துமீறிய தாக்குதல் அதிகரித்து உள்ளது. செப்டம்பர் 30ந்தேதி இறுதி வரையில் 600க்கும் கூடுதலான முறை இந்திய எல்லை மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த 10 வருடத்தில் நடந்த அதிக எண்ணிக்கையிலான அத்துமீறிய தாக்குதல் ஆகும்.