

இந்நிலையில், வடகாஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உரி பகுதியில் கட்சி தொண்டர்கள் முன் பேசும்பொழுது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடைய பகுதி என எவ்வளவு காலம் நாம் கூறி கொண்டிருப்போம்? அது அவர்களது தந்தையின் பங்கு அல்ல. அது (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பாகிஸ்தான். இது (ஜம்மு மற்றும் காஷ்மீர்) இந்தியா என கூறியுள்ளார்.
70 வருடங்கள் கடந்து விட்டன. அவர்களால் (இந்தியா) அதனை (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பெற முடியவில்லை.
அவர்கள் (இந்தியா) இன்று அது நம்முடைய பகுதி என கூறுகிறார்கள். அதனால் அதனை (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) எடுத்து கொள்ளுங்கள். தயவு செய்து அதனை (பாகிஸ்தானிடம் இருந்து) எடுத்து கொள்ளுங்கள் என நாங்களும் கூறுகிறோம். அவர்கள் (பாகிஸ்தான்) பலவீனர்கள் அல்ல. அவர்கள் வளையல்கள் அணிந்திருக்கவில்லை. அவர்களும் அணு குண்டு வைத்துள்ளனர்.
போரை பற்றி சிந்திக்கும் முன் மனிதர்களாக நாம் எப்படி வாழ்வோம் என சிந்திக்க வேண்டும் என பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், அவர்கள் (பாகிஸ்தான்) குண்டு வீசினால், பொது மக்கள் மற்றும் வீரர்கள் இங்கு (காஷ்மீர்) பலியாகின்றனர். இங்கிருந்து குண்டு வீசினால் நம்முடைய மக்கள் மற்றும் வீரர்களும் அங்கு (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) பலியாகின்றனர்.
எதுவரை இந்த புயல் தொடர்ந்து வீசும்? அப்பாவி மக்களின் ரத்தம் எதுவரை தொடர்ந்து சிந்தும்? என அவர் பேசியுள்ளார்.
ஒரு வீட்டில் இருந்து அடுத்தவர் வீட்டுக்கு செல்வதுபோல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நீங்கள் கடந்து செல்லும் நாள் வரும் என அவர் கூறியுள்ளார். அப்படி இல்லாமல் இந்த நாட்டில் அமைதி இல்லை என்றும் அவர் பேசியுள்ளார்.