

அவர்கள் இதுவரை 20 கிராமங்களை இலக்காக கொண்டு தாக்குலில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்.எஸ். புரா பகுதியில் 3 பேரும், ஆர்னியா பகுதியில் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ராம்கார்ஹ் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.
இதேபோன்று பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படைகள் நேற்று மாலை துப்பாக்கி சூடு நடத்தியதில் 8 வயது சிறுவன் காயமடைந்துள்ளான்.
சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாகிஸ்தானிய படைகளின் அத்துமீறிய தொடர் தாக்குதல்களால் அங்கிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் படைகளின் அத்துமீறிய தாக்குதல்கள் இந்த வருடத்தில் அதிகரித்து உள்ளன. இந்த வருடம் ஆகஸ்டு 1 வரை பாகிஸ்தான் ராணுவம் 285 முறை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 2016ம் வருடத்தில் 228 பேர் என்ற அளவில் இந்த தாக்குதல் இருந்துள்ளது. இது இவ்வருடத்துடன் ஒப்பிடும்பொழுது குறைவாகும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.