சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சு: இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக இந்திய தூதரை நேரில் அழைத்த பாகிஸ்தான், தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சு: இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
Published on

இஸ்லமாபாத்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்து மத துறவிகள் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. அதில் பேசிய பல துறவிகள் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினர். முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் வகையிலான இந்த பேச்சுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து இருந்தனர். வெறுப்புணர்வு பேச்சு தொடர்பாக ஜிதேந்திர நாரயண் தியாகி உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக இந்திய தூதரை நேரில் அழைத்த பாகிஸ்தான், தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெறுப்புணர்வு பேச்சு விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பிலோ, இந்திய அரசங்காம் தரப்பிலோ வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதோடு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்த வெறுப்புப் பேச்சுகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பரவலான வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்தியா விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com