

ஜம்மு,
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக குண்டுகள் மூலம் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் நிகழாண்டு மட்டும் 650 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு 16 வீரர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.