

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டத்தின், எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று காலை 9.30 மணியளவில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள கேரி, லாம், புகர்னி மற்றும் பீர் படசெர் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது வரை, இரு தரப்பிலும் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து, எல்லையில் இருந்து 5 கி.மீட்டர் துரம் வரை உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.