

ஜம்மு,
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இருக்கும் இந்திய கிராமங்களை குறிவைத்து நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு 7 மணி அளவில் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இதேபோன்று எல்லைக்கட்டுப்பாடு அருகே உள்ள பாலக்கோட் மற்றும் மென்டகர் செக்டர் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் சேதம் ஏதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றார்.