

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாலகோட் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது.
அவர்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி அளித்து வருகிறது. நேற்றும் இதேபோன்று அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது.
கடந்த சில நாட்களாக எல்லை பகுதியில் சீனா ஒரு புறம் படைகளை வாபஸ் பெறுவதில் இழுத்தடிப்பு செய்து, எல்லையில் பதற்ற நிலையை நீடித்து வரும் சூழலில், மறுபுறம் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறலில் ஈடுபடும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இவற்றை இந்திய ராணுவ வீரர்கள் திறமையுடன் எதிர் கொண்டு வருகின்றனர்.