குஜராத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர் சிக்கினார்

குஜராத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர் ஒருவர் எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கினார்.
குஜராத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானியர் சிக்கினார்
Published on

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் இந்திய, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பனஸ்கந்தா மாவட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் முகமது அலி (வயது 35) என்ற பாகிஸ்தானியர் பிடிபட்டார். அவர் சிந்தி பேசும் நபர் ஆவார். அவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, எல்லை தூண் 1015 அருகே எல்லை பாதுகாப்பு படையினரிடம் நேற்று முன்தினம் மாலை பிடிபட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் பலாசர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. கடந்த 6-ந் தேதி, எல்லை தூண் 1,050 அருகே மற்றொரு பாகிஸ்தானியர் பிடிபட்டது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com