டாப் மாடல்கள் -நடிகைகளை உளவு வேலைக்கு பயன்படுத்திய பாகிஸ்தான் - முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்

தனக்கும் வேறு சில நடிகைகளுக்கும் எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக மேஜர் ராஜாவை சஜல் அலி கடுமையாக சாடியுள்ளார்.
டாப் மாடல்கள் -நடிகைகளை உளவு வேலைக்கு பயன்படுத்திய பாகிஸ்தான் - முன்னாள் ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்
Published on

புதுடெல்லி

அடில் ராஜா ``சோல்ஜர் ஸ்பீக்ஸ்'' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்,.அவருக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர்.பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை சஜல் அலியை பாகிஸ்தான் ராணுவம் 'தேன் டிராப்' ஆக பயன்படுத்தியதாக யூடியூபரான மஜிர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்கும் வேறு சில நடிகைகளுக்கும் எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக மேஜர் ராஜாவை சஜல் அலி கடுமையாக சாடியுள்ளார்.

மஜிர் ராஜா வெளியிட்ட வீடியோவில், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகள், உளவு வேலைக்கு பாகிஸ்தானின் நடிகைகளை பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். அவர் அந்த நடிகைகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை மட்டும் பயன்படுத்தி இருந்தார்.மொத்தம் 4 நடிகைகளை அவர் குறிப்பிட்டு இருந்தார்.முழுப்பெயர்களுக்குப் பதிலாக நடிகைகளின் முதலெழுத்துக்களைப் பகிர்ந்து கொண்டாலும், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது நெட்டிசன்களுக்கு தெளிவாகத் தெரிந்தது.

சில பாகிஸ்தானிய நடிகைகள் மற்றும் மாடல்கள் அரசியல்வாதிகளை சிக்க வைப்பதற்காக ஜெனரல் (ஓய்வு) பஜ்வா மற்றும் முன்னாள் ஐஎஸ்ஐ ஹான்கோ பைஸ் ஹமீத் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து வேலை செய்வதாக அடில் ராஜா கூறினார்.

இது தொடர்பான அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உளவு அமைப்பு தயாரித்து வெளியிட்ட நாடகங்களில், பணியாற்றிய நடிகைகள் தான் அவர்கள் என நெட்டிசன்கள் பேச தொடங்கியிருக்கிறார்கள்.

வீடியோ வெளிவந்த சிறிது நேரத்திலேயே, ஏராளமான சமூக ஊடக பயனர்கள் மெஹ்விஷ் ஹயாத், மகிரா கான், குப்ரா கான் மற்றும் சஜல் அலி ஆகியோரின் புகைபடங்களை வெளியிட்டு அவர்கள் தான் சமூக வலைதளங்களில் பேசத்தொடங்கினர்.

அதில் நடிகை சஜல் ஆலி என்பவரும் ஒருவர். இதையடுத்து, அவர் இந்தக் குற்றச்சாட்டுக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக , "நமது நாட்டின் தரம் குறைந்திருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல, அருவருக்கத்தக்கது. ஒருவரின் தனி பண்பு நலனை படுகொலை செய்வது, மனிதத் தன்மையின் மிக மோசமான வடிவம். பெரும் பாவத்திற்குரியது" எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா புதிய அரசாங்கத்தை, குறிப்பாக ஷெரீப் குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு "டாப் மாடல்கள் மற்றும் நடிகைகள்" முன்னாள் உயர்மட்ட அதிகாரிகளுடன் முறைகேடான உறவு வைத்திருந்ததாகக் கூறிய வீடியோவை அடுத்து நடிகர் குப்ரா கான் யூடியூபர் அடில் ராஜா மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com