காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு; இந்தியா பதிலடி
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மன்கோட் பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்பொழுது, அதனை மீறும் வகையில் அந்நாட்டு ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

இதற்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய எல்லை பகுதியில், ராணுவ முகாம்கள், நிலைகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com