

ஸ்ரீநகர்,
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிர்னி எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று காலை 10 மணியளவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியபடி முன்னேறி வந்தனர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். ஆனால் இந்த சண்டையில் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.