காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், போர் ஒப்பந்த விதிகளை மீறி நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காலை 11.30 மணியளவில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் பிரிவின் எல்லைக்கோட்டு பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியும், சிறிய ரக குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் இரவும் பூஞ்ச் மாவட்டத்தின் தேவ்கார், மால்டி பிரிவுகளை குறி வைத்து அத்துமீறலில் ஈடுபட்டது.

இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com