காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி மற்றும் கஸ்பா ஆகிய பிரிவுகளில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இன்று மாலை 6.50 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லையில் தாக்குதல்கள் நடைபெறாத வகையில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனாவால் இரு நாடுகளும் பாதிக்கப்பட்ட சூழலிலும், பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்திய நிலைகளை இலக்காக கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் தவிர்த்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட குடிமக்களும் பலியாகி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு வருகிறது. எனினும், பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com