பஞ்சாப் எல்லையில் மீண்டும் சம்பவம் ஏ.கே. துப்பாக்கியை சுமந்து வந்த பாகிஸ்தான் டிரோன்

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்து சமீப நாட்களாக பாகிஸ்தான் டிரோன்கள் மீண்டும் மீண்டும் ஊடுருவி வருகின்றன.
பஞ்சாப் எல்லையில் மீண்டும் சம்பவம் ஏ.கே. துப்பாக்கியை சுமந்து வந்த பாகிஸ்தான் டிரோன்
Published on

புதுடெல்லி, 

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்து சமீப நாட்களாக பாகிஸ்தான் டிரோன்கள் மீண்டும் மீண்டும் ஊடுருவி வருகின்றன. கடந்த மாதத்தில் 2-க்கும் மேற்பட்ட டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் மீண்டும் ஒரு பாகிஸ்தான் டிரோன் விமானம், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சுமந்தபடி இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. இதை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர்.

குருதாஸ்பூர் மாவட்டம் மெல்டா கிராமத்தையொட்டிய எல்லைப்பகுதியை கடந்து இந்த டிரோன் ஊடுருவியது. அது சுட்டுவீழ்த்தப்பட்டதில் நபிநகர் கிராமத்தின் தோட்ட வயல்வெளியில் விழுந்தது. சம்பவ இடத்தில் டிரோனில் இணைக்கப்பட்டிருந்த ஏ.கே. ரக துப்பாக்கி, 2 தோட்டா குப்பிகள் மற்றும் 40 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com