

கத்துவா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் போபியா பகுதியில் ஹீராநகர் பிரிவில் சர்வதேச எல்லை பகுதியை ஒட்டி எல்லை பாதுகாப்பு படையினர் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை 6.45 மணியளவில் பாகிஸ்தானியர் ஒருவர் இந்தியாவிற்குள் ஊடுருவ முற்பட்டுள்ளார். ஆனால் அவரை எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர். அதனையும் மீறி அவர் தொடர்ந்து முன்னேறியுள்ளார்.
இதனால் படையினர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்நபர் உயிரிழந்து விட்டார். அவரது உடல் பூஜ்ய கோட்டு பகுதியில் பாகிஸ்தானிய எல்லை அருகே கிடக்கின்றது.