குஜராத் எல்லையில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானி கைது

குஜராத் எல்லையில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
குஜராத் எல்லையில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானி கைது
Published on

அகமதாபாத்,

குஜராத் எல்லையில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானியை எல்லைப் பாதுகாப்பு படையினர் (BSF) கைது செய்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பார்டர் அவுட் போஸ்ட் (BOP) அருகே உள்ள வாயிலை ஏறிக்குதித்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்றார். அவரை உடனடியாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

அந்த நபர் பாகிஸ்தானின் நகர்பார்க்கர் பகுதியில் வசிக்கும் தயா ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து பிஎஸ்எஃப் குஜராத் எல்லைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com