

ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பீம்பர் காலி பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானிய பயங்கரவாதியை இந்திய ராணுவம் முறியடித்து சுட்டு வீழ்த்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.