பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்; கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தான் படையின் அத்துமீறிய தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்; கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் பலி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மேலவையில் பாதுகாப்பு துறைக்கான இணை மந்திரி ஸ்ரீபத் நாயக் எழுத்துப்பூர்வ முறையில் அளித்துள்ள பதிலில், எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட எல்லை மீறிய துப்பாக்கி சூடு தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

எனினும், ஜம்முவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் (மார்ச் 1 முதல் செப்டம்பர் 7 வரை) எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதல் நடத்திய 2,453 சம்பவங்கள் நடந்துள்ளன.

ஜம்முவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான சர்வதேச எல்லை பகுதியில் இந்த ஆண்டில் (மார்ச் 1 முதல் ஆகஸ்டு 7 வரை) 192 எல்லை மீறிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் புனிதத்தன்மையை பாகிஸ்தான் படையினர் காக்க வேண்டும் என தூதரக அளவில் இந்தியாவால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com