இனி ரூ.20 லட்சம் வரை சொத்து பதிவுக்கு 'பான்' எண் தேவையில்லை

ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும், 'பான்' எண் தெரிவித்தால் போதும்.
இனி ரூ.20 லட்சம் வரை சொத்து பதிவுக்கு 'பான்' எண் தேவையில்லை
Published on

சென்னை,

சொத்து வாங்குபவர்கள், அதற்கான பத்திரப்பதிவின்போது, 'பான்' எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் விவரங்களை அளிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. 'பான்' எண் இல்லாதவர்கள், அதற்குரிய தனி படிவத்தில் உறுதிமொழி அளிக்க வேண்டும். இதில், தற்போதைய நிலையில், ரூ.10 லட்சம் வரையிலான சொத்துகளை பதிவு செய்யும்போது, 'பான்' எண் அளிப்பது கட்டாய நடைமுறையாக உள்ளது.

இந்த நிலையில், வருமான வரி சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதில், 'பான்' எண் அளிப்பதற்கான பல்வேறு வரம்புகள் மாற்றப்பட்டு உள்ளன. இதன்படி, ரூ.20 லட்சம் மதிப்பு வரையிலான சொத்துக்களை பதிவு செய்ய, 'பான்' எண் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும், 'பான்' எண் தெரிவித்தால் போதும். இதில், சொத்து வாங்குவது, விற்பது, பரிசாக கொடுப்பது, கூட்டாக மேம்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்கு, இந்த விலக்கு பொருந்தும் என புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com