ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத்கோவிந்த், மீராகுமார் ஆகியோரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்பு

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்கோவிந்த் மற்றும் மீராகுமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத்கோவிந்த், மீராகுமார் ஆகியோரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்பு
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவு பெறுகிறது. இதன் காரணமாக புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் ராம்நாத்கோவிந்த் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மீராகுமார் உட்பட 90 க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இவற்றில், ராம்நாத்கோவிந்த் மற்றும் மீராகுமார் ஆகிய இருவரின் வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. ஏனைய அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com