பத்மாவதி திரைப்பட விவகாரம் மத்திய அமைச்சகம், தணிக்கை குழுவிடம் அறிக்கை கோருகிறது பாராளுமன்ற குழு

பத்மாவதி திரைப்படம் தொடர்பாக மத்திய அமைச்சகம் மற்றும் தணிக்கை குழு அறிக்கையை அளிக்க பாராளுமன்ற குழு கேட்டுக் கொண்டு உள்ளது.
பத்மாவதி திரைப்பட விவகாரம் மத்திய அமைச்சகம், தணிக்கை குழுவிடம் அறிக்கை கோருகிறது பாராளுமன்ற குழு
Published on

புதுடெல்லி,

பத்மாவதி படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என எதிர்ப்பு எழுந்தது போராட்டம் வெடித்த நிலையில் திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. படத்திற்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேச மாநிலங்கள் தடை விதித்து உள்ளது. இதற்கிடையே பட விவகாரம் பாராளுமன்ற குழு வரையில் சென்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.க்கள் சிபி ஜோஷி மற்றும் ஓம் பிர்லா, பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக பாராளுமன்ற குழுவிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.

இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள பாராளுமன்ற குழு பத்மாவதி திரைப்படம் தொடர்பாக மத்திய அமைச்சகம் மற்றும் தணிக்கை குழு அறிக்கையை அளிக்க கேட்டுக் கொண்டு உள்ளது.

பத்மாவதி திரைப்பட விவகாரத்தை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் தேசிய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு பாராளுமன்ற குழு பரிந்துரை செய்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நவம்பர் 30-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டு உள்ளது என குழுவின் தலைவர் பாரதீய ஜனதாவின் பாகத் சின் கோஷ்யாரி கூறிஉள்ளார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பா.ஜனதா ஆளும் மாநில முதல் மந்திரிகள், பஞ்சாப் மாநில முதல்-மந்திரி படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com