'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு 'ரா' உளவு அமைப்பின் தலைவராக நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்
Published on

இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் வருகிற 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் 'ரா' உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

'ரா' உளவு அமைப்பின் தலைவராக ஜூலை 1-ம் தேதி பதவியேற்கும் பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த பராக் ஜெயின், ரா உளவு அமைப்பில் பல ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com