பாராஒலிம்பிக் போட்டி; வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராஒலிம்பிக் போட்டி; வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

டோக்கியோ,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் விளையாடினார்.

அதில் பிரிட்டன் வீரர் ஜானதன் உடன் பிரவீன்குமாருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை பிரவீன்குமார் பதிவு செய்தார். கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார் பிரவீன்குமார். பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்.

இந்நிலையில், பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெலியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பாரா ஒலிம்பிக்கில் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது பெருமை அளிக்கிறது. இந்த பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பிற்கு கிடைத்தவை. அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com