பெற்றோரின் கவனமின்மை: எலி விஷம் தின்ற குழந்தை உயிரிழப்பு

கர்நாடகாவில் பெற்றோரின் கவனமின்மையால் எலி விஷம் தின்ற பெண் குழந்தை உயிரிழந்து உள்ளது.
பெற்றோரின் கவனமின்மை: எலி விஷம் தின்ற குழந்தை உயிரிழப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் தட்சிண கன்னடாவின் புத்துர் நகரில், பஜத்துர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சைஜூ. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி தீப்தி. இந்த தம்பதியருக்கு இரண்டரை வயதில் ஷ்ரேயா என்ற மகள் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் எலித்தொல்லை அதிகம் உள்ளது என்பதற்காக எலி விஷம் கலந்த டியூப்பை, நாய் கூண்டு அருகில் வைத்திருந்தனர். விளையாடியபடியே, நாய் கூண்டு அருகில் சென்ற ஷ்ரேயா, எலி விஷத்தை வாயில் போட்டு தின்றது. வீட்டிலிருந்த யாரும் இதனை கவனிக்கவில்லை.

எலி விஷம் தின்ற குழந்தை வாந்தியெடுத்து, மயங்கி விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து, உடனடியாக உப்பினங்கடி மருத்துவமனைக்கு ஷ்ரேயாவை அழைத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து கூடுதல் சிகிச்சைக்காக, மங்களூரின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுபற்றி உப்பினங்கடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com