நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 4 April 2025 1:46 PM IST (Updated: 8 April 2025 1:25 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 27 சதவீதம் பரஸ்பர வரி விதித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த அமர்வின் போது 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும். அவையின் வேலை நேரம் 118 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்ததாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், வக்பு திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்ற சோனியா காந்தியின் கூற்று துரதிர்ஷ்டவசமானது மற்றும் அவையின் கண்ணியத்திற்கு எதிரானது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மக்களவையை தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர். தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 27 சதவீதம் பரஸ்பர வரி விதித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story