76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 'ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல்' மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, கடந்த ஜூலை 27-ந் தேதி மக்களவையில் நிறைவேறியது.

இந்நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் 2 அவைகளின் ஒப்புதலையும் பெற்று விட்டது.

விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால், ''மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் 1,486 பழைய சட்டங்களை ரத்து செய்தது. தற்போது நீக்கப்படும் 76 பழைய சட்டங்களையும் சேர்த்து, மொத்தம் 1,562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com