மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு; நாடாளுமன்றத்தில் தீர்மானம்

மணிப்பூரில் நடந்து வரும் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. ஓராண்டுக்கும் மேலாக வன்முறை நீடித்த நிலையில், முதல்வராக இருந்த பைரேன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13ம் தேதி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மணிப்பூரில் நடந்து வரும் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அதன் மீது 2 உறுப்பினர்கள் பேச முயன்றனர். இருப்பினும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பீகார் வாக்காளர் பட்டியல் பிரச்சினைக்காக முழக்கமிட்டபடி இருந்தனர். பின்னர், அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story






