நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம் - எதிர்க்கட்சிகள் அமளி

மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
டெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி வரை ஒருமாத காலம் நடைபெறுகிறது.
மக்களவை, மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கூடியுள்ளனர். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். அதேபோல், எதிர்க்கட்சிகள் தரப்பில் ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல், பீகார் வாக்காளர்கள் கணக்கெடுப்பு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அவை நடவடிக்கை தொடக்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களில், பஹல்காம் தாக்குதலை விவாதிக்கக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நாடாளுமன்ற அலுவல் பட்டியல் (நிகழ்ச்சி நிரல்) முதல் முறையாக தமிழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற அலுவல் பட்டியல் விவரம் பின்வருமாறு;-






