மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரை: மத்திய கிழக்கு போர் விவகாரம் குறித்து பேச வாய்ப்பு

பிரதமர் மோடி உரையாற்ற உள்ள நிலையில், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரை: மத்திய கிழக்கு போர் விவகாரம் குறித்து பேச வாய்ப்பு
Published on

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உர விநியோகத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் உரங்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது

இந்தியாவில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், மத்திய கிழக்கு போர் விவகாரம், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் உள்ளிட்டவைகள் பற்றி பிரதமர் மோடி இன்று மக்களவையில் விளக்கமளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரையில் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் பற்றியும் பிரதமர் மோடி எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com