நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; முக்கிய மசோதாக்கள் தாக்கலாக வாய்ப்பு

காரசார விவாதங்களால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; முக்கிய மசோதாக்கள் தாக்கலாக வாய்ப்பு
Published on

புதுடெல்லி,

நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன.

நாடாளுமன்றம் கூடுகிறது

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா. தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா). சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடுமையான அரசியல் விவாதங்களை தூண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்க்கோலம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்னிருத்தி போர்க்கோலம் பூண்டுள்ளது.

எனவே நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்போது இது கடுமையாக எதிரொலிக்கும். காரசார விவாதங்களால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com