நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட்டை நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து, பிப்ரவரி 11-ந் தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தெடங்கியது. கெரேனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தெடங்கி நடைபெற்றன. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு, அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனிடையே உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி நாளை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com