நாடாளுமன்ற இடைத்தேர்தல்; குடும்பத்துடன் வந்து வாக்களித்த இமாசல பிரதேச முதல்-மந்திரி

இமாசல பிரதேசத்தில் மாண்டி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடும்பத்துடன் வந்து முதல்-மந்திரி வாக்களித்து உள்ளார்.
நாடாளுமன்ற இடைத்தேர்தல்; குடும்பத்துடன் வந்து வாக்களித்த இமாசல பிரதேச முதல்-மந்திரி
Published on

சிம்லா

இமாசல பிரதேசத்தில் மாண்டி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், முர்ஹாக் பகுதியில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வந்து வாக்களித்து உள்ளனர்.

இதில், காலை 11 மணி நிலவரப்படி 17.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 2ந்தேதி நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com