‘நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்’ - தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி

நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் உறுதியளித்தார்.
‘நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்’ - தலைமை தேர்தல் கமிஷனர் உறுதி
Published on

சண்டிகர்,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி இருக்கிறது. இந்த தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறியுள்ளார்.

சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவப்படிப்பு நிறுவனத்தின் புதிய கல்வியாண்டு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மோசடி செய்ய முடியாதது. அவற்றின் செயல்பாடுகளை நிபுணர் குழு ஆய்வு செய்து உறுதியளித்து இருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு முறையின் நேர்மையில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com