வங்கி மோசடி: ரிசர்வங்கி கவர்னருக்கு பாராளுமன்ற நிதி நிலைக்குழு சம்மன்

வங்கி மோசடி தொடர்பாக பாராளுமன்ற நிதி நிலைக்குழு ரிசர்வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #RBI
வங்கி மோசடி: ரிசர்வங்கி கவர்னருக்கு பாராளுமன்ற நிதி நிலைக்குழு சம்மன்
Published on

புதுடெல்லி

பஞ்சாப் நேஷனல் வங்கியில், பிரபல வைர நகை வியாபாரி நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷி 13 ஆயிரம் கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பஞ்சாப் வங்கி மட்டுமல்லாமல், பிற வங்கிகளிலும் இதுபோன்று மெகா மோசடி நடைப்பெற்றுள்ளது. ஒவ்வொரு வங்கியும் ஆண்டு தணிக்கை அறிக்கையை மத்திய ரிசர்வ் வங்கியிடம் அளிக்கும். ஒவ்வொரு வங்கியின் செயல்பாட்டையும் ஆர்பிஐ கண்காணித்து வருகின்றது.

அப்படி இருக்க இவ்வளவு பெரிய மோசடி நடைப்பெறுவது எப்படி. அந்த வங்கி தொடர்பாக சந்தேகம் எழாதது ஏன் என பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பல வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இந்த நிலையில் இது தொடர்பாக வீரப்ப மொய்லி தலைமையிலான பாராளுமன்ற நிதி நிலைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக நிதி சேவைகள் செயலாளர் ராஜீவ் குமாரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்நிலையில் மோசடி தொடர்பான கேள்விகளுக்கு மே 17ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் படேலுக்கு பாராளுமன்ற குழு சம்மன் அனுப்பி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com