பிட்காயின் வர்த்தகம் குறித்து நாடாளுமன்ற குழு ஆலோசனை: தடை விதிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு...!

பிட்காயின் வர்த்தகம் குறித்து நாடாளுமன்ற குழு ஆலோசனைக்கு தடை விதிக்க பெரும்பாலான எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஆன்லைனில் புழங்கும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை. அதே சமயத்தில் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளும் இல்லை.

உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மீது ஆர்வம் எழுந்துள்ளது. அதே சமயத்தில் அதனால் ஆபத்து உருவாகுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. கிரிப்டோ கரன்சி வர்த்தகம் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில், நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு நேற்று இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. குழுவின் தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான ஜெயந்த் சின்கா தலைமை தாங்கினார். இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். அதன் சாதக, பாதகங்கள் பற்றி உறுப்பினர்களான எம்.பி.க்கள் விவாதித்தனர். பெரும்பாலான உறுப்பினர்கள், இந்த வர்த்தகத்துக்கு ஒரேயடியாக தடை விதிக்க வேண்டாம் என்றும், இதை ஒழுங்குபடுத்தலாம் என்றும் வலியுறுத்தியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com