

பனாஜி
உணவு ஒவ்வாமை பிரச்சினை காரணமாக மும்பை மருத்துவமனையில் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வயிற்று வலியால் அவதிப்பட்ட மனோகர் பரிக்கர் முதற்கட்டமாக கோவா அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து முதல்வர் அலுவலக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், முதற்கட்ட சிகிச்சையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய முதல்வர் மனோகர் பரிக்கர் இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளார். முதல்வரின் உடல் நலம் தற்போது முன்னேறியுள்ளது என தெரிவித்தனர்.
முதல்வர் நேற்று இரவு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார் என்பதை மட்டும் தெரிவித்த கோவா மருத்துவமனையின் டீன் ப்ரதிப் நாயக் வேறு எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். வரும் திங்களன்று கோவா சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.