தேர்தலில் முறைகேடு தெரியவந்தால் போட்டியிடக் கூடாது: எதிர்க்கட்சிகளுக்கு ஆப்ஜித் தீப்கே வலியுறுத்தல்

தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் கட்சி சார்பின்றி அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக எழுப்பப்பட வேண்டும் என்று ஆப்ஜித் தீப்கே கூறியுள்ளார்.
ஆப்ஜித் தீப்கே
Published on: 

புதுடெல்லி:

தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அவ்வாறு கூறிக்கொண்டே தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிடுவது ஏன்? என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையம் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், அபிஜீத் திப்கே இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தேர்தல் நடைமுறை முறைகேடாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதினால், அதில் பங்கேற்பதன் மூலம் அந்த தேர்தலுக்கு அவர்களே சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவதாகிவிடும் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல்கள் முறைகேடு செய்யப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

ஆனால், தொடர்ந்து அந்த தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம், அவை நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தினால், அரசியல் ரீதியான இருப்பை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தொடர்ந்து போட்டியிடுகின்றனவா?தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் கட்சி சார்பின்றி அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக எழுப்பப்பட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com