கட்சி அலுவலகம் எங்கள் சொத்து, சட்டப்படி மீட்போம் பெங்களூரில் டிடிவி தினகரன் பேட்டி

கட்சி அலுவலகம் எங்கள் சொத்து அதை சட்டப்படி மீட்போம் என பெங்களூரில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.
கட்சி அலுவலகம் எங்கள் சொத்து, சட்டப்படி மீட்போம் பெங்களூரில் டிடிவி தினகரன் பேட்டி
Published on

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்திக்கிறார்.

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கணவர் நடராஜனை பார்க்க சசிகலா 5 நாட்கள் பரோலில் சென்னை வந்து விட்டு மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார்.அதன்பிறகு அவரை உறவினர்கள் யாரும் சந்திக்கவில்லை.

இந்த நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தார். இதற்காக தினகரன் சென்னையில் இருந்து காரில் நேற்று இரவே பெங்களூரு வந்து விட்டார். அவருடன் அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் வந்து இருந்தனர்.

சசிகலா சந்திப்புக்கு பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. எங்கள் ஆதரவு எம்.பி., க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. இரட்டை இலை யாருக்கு என்பதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் குறுக்கு விசாரணை நடத்த தேர்தல் கமிஷன் பதில் தரவில்லை.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். கட்சி அலுவலகம் எங்கள் சொத்து. சட்டப்படி மீட்போம். கமல் மட்டுமல்ல அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்போம். கமல் வெற்றியை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அரசியலில் கமல் வெற்றி பெறுவாரா என்பது தெரியாது.
அமைச்சர்கள் பேசுவது காமெடியாக உள்ளது. மக்கள் ஏற்று கொள்பவர்களே அரசாள வேண்டும். தமிழகத்தை மனிதர்கள் தான் ஆள வேண்டும். ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து முறையாக அமல்படுத்தப்படவில்லை. பண மதிப்பிழப்பினால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com