கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கபோவதில்லை - சுப்பிரமணியசாமி டுவிட்

கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கபோவதில்லை என சுப்பிரமணியசாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கபோவதில்லை - சுப்பிரமணியசாமி டுவிட்
Published on

புதுடெல்லி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியின் பின்புறம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்க கூட்டங்கள் நடத்த தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்தது. தமிழகத்தில் முக்கிய நகரங்களில் கூட்டம் நடைபெறுகிறது. நிறைவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 30ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு தெற்கில் உதித்தெழுந்த சூரியன் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற இருக்கிறது.

சென்னையில் 30ந் தேதி நடைபெறும் கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என திமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொள்வது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணிக்கு அச்சாரமாக இருக்குமோ? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கபோவதில்லை என முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது, என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com